அழகான நடிப்பே போய்வாமந்திரக் குரலே போய்வா

அழகான நடிப்பே போய்வா
மந்திரக் குரலே போய்வா
*
‘சலங்கை ஒலி’ திரைப்படத்தில் சரத்பாபு அவர்கள் நடித்த நாயகனின் நண்பன் கதாபாத்திரம் என்றென்றும் திரைப்பட ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்று.
அதே போல் முள்ளும் மலரும் ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’ பாடலும் அதன் காட்சிகளும்.
‘அண்ணாமலை’ படத்தில் நாயகனின் நண்பன் கதாபாத்திரமும் சிறப்புக்குரிய ஒன்றுதான்.
அனைத்திலும் கச்சிதமாகப் பொருந்தி இருப்பார் நடிகர் சரத்பாபு.
அதே போல் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தில் அவர் ஏற்றிருந்த வேடமும் அவரால் பரிமளித்தது.
இன்னும் எத்தனையோ எத்தனையோ…
அவரது தோற்றம் …. ராயல் லுக் என்றால் அதுதான்… அதுவே திரையை நிரம்பி வழியச் செய்யும். ஆனால் அது மட்டும் அல்ல… அவரது இயல்பான நடிப்பு அதை விட அழகு.
அவரது குரல்… ஆகா அது ஒரு மாயத் தூரிகை. மனிதின் இண்டு இடுக்குகளில் எல்லாம் நுழைந்து வர்ணங்களை வாரி இறைக்கக்கூடிய ஒன்று.
இன்று அவர் ஏற்றிருந்த பாத்திரங்கள் வாழ்கின்றன. அவர் மறைந்து விட்டார்.
ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான நடிப்புக்குச் சொந்தக்காரரான சரத்பாபு அவர்கள் மறைவிற்கு என் அஞ்சலி.
*
பிருந்தா சாரதி
