இந்தி திரைப்பட நடிகை ‘நர்கீஸ்

‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற முதல் இந்தி நடிகை, இந்தியின் லேடி சூப்பர் ஸ்டார், முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய திரைப்படமான ’மதர் இந்தியா’ வில் நடித்தவர், என்று சிலபல பெருமைகளுக்கு சொந்தக்காரரான பழம்பெறும் இந்தி திரைப்பட நடிகை ‘நர்கீஸ்
கெமிஸ்ட்ரி என்று சினிமா உலகில் சொல்வார்களே, இந்திய திரையுலகை பொறுத்தவரை முதன் முதலில் கெமிஸ்ட்ரி என்று பேசப்பட்டது 1950களில் ராஜ்கபூர்- நர்கீஸ் ஜோடிதான்.. நர்கீஸின் பயணமே அலாதியானது.
1930களில் குழந்தை நட்சத்திரம்..40 களில் ஹீரோயின். பின்னர் பெரிய ஸ்டாராகி நாடே வியக்கும் வண்ணம் ராஜ்கபூருடன் காதல். 15 படங்களில் இணைந்து நடித்தார். கிட்டத்தட்ட கணவன் மனைவி போல உலகின் பல நாடுகளில் வலம் வந்தனர்.
ராஜ்கபூரின் ஆர்.கே.பிலிம்ஸ் பேனரிலேயே ராஜகபூரால் தாங்கப்பிடிக்கப்படும் பெண்ணாக வடிவமைக்கிற அளவுக்கு நிலைமை போனது.. முதல் மனைவி கடும் எதிர்ப்பு.. விளைவு, கடைசியில் ”காதல்” முறிவு..
அப்போது புதுமுகநாயகன் சுனில் தத்..ஒரு விபத்தில் காப்பாற்றுகிறார்.. அந்தஸ்து பாராமல் அந்த வயதில் சின்னவன் சுனில்தத்துடன் காதல்.. கையோடு திருமணம்,, மகன் சஞ்சய் தத் பிறக்கிறான்.. பின்னாளில் ராஜ்ய சபா எம்பி..1981ல் புற்றுநோய்க்கு பலி.
ஆக.. பாலிவுட் திரையுலகில் முதல் லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற நர்கீஸின் 96 வது பிறந்த நாளின்று..
from The Desk of கட்டிங் கண்ணையா