சினிமா

இன்று இசைஞானி அவர்களின் பிறந்த நாள் 02.06.2023

இன்று இசைஞானி அவர்களின் பிறந்த நாள் 02.06.2023.

இசைஞானிக்கு
சில வரிகள்..

பண்ணைப்புரத்து சகோதரர்களுக்கு பட்டது பகவானின் பார்வை

பஞ்சு அருணாசலம் தந்தார் அன்னக்கிளி படத்தால் உயர்வை

கிராமத்து மெட்டுக்களைக் கொ ணர்ந்ததோ புதுமைக்கு வித்திட்ட வை

கீர்த்தனைகளால் திருவாசகத்தை தந்ததோ பெருமைகள் சேர்த்தவை

இசைக்கும் ராசாவின் தோற்றம் என்றும் எளிமையானவை

இசையால் வளர்ந்த வாழ்க்கை வசந்தம் ஆனவை

இதமான பாடல்கள் அவரின் ஈடுபாட்டால் பிறந்தவை

இனிமையான மெட்டுக்கள் சேர்த்தது நம் செவிக்குள் சுவை

ஹங்கேரியில் அமைத்த சிம்போனி உலகத் தரமானவை

அங்கிசைத்த ஆங்கிலேயனுக்கும் அதிசயிக்க வைத்த வை

இசைக்குள்ளே தான் இவர் வாழ்க்கை ஐக்கியமானவை

இத்தமிழன் தந்தது தரமென எவரும் ஏற்றுக் கொண்டவை

ஞானி இசையின் சிந்தனை ஞானத்துடன் கலந்தவை

ஞாலத்தில் தனித்தன்மை முன்னோரருளால் அமைந்தவை

ராசாவின் எண்ணம் இசையால் நிறைந்து இருப்பவை

இதயத்தை வருடும் சங்கீதம் உணர்வோடு கலந்தவை

கேட்கும் பாடல்களில் தந்ததோ நாளும் மகிழ்வை

கேட்பவருக்கு சேர்த்தார் தன்னிலை மறக்கும் உணர்வை

கலைத்தாய்க்கு இவரளித்த பங்கு காலத்தால் சிறந்தவை

நிலைத்திருக்கும் பாடல்கள் என்றும் நம் நெஞ்சில் நிறைந்தவை.

முருக. சண்முகம்
அய்யப்பன்தாங்கல் காஞ்சிபுரம் மாவட்டம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button