தமிழ்க் கலை உலகில் பேரரசியாகத் திகழ்ந்த சுந்தராம்பாள்

தமிழ்க் கலை உலகில் பேரரசியாகத் திகழ்ந்த சுந்தராம்பாள்
நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா ஜோடி
நாடகம் முடிந்தபோது, ஒட்டுமொத்தப் பார்வையாளர் களும் ஒருமித்த குரலில் சொன்னது… ‘இதுதான் சிறந்த ஜோடி!’
நாடகத்துக்காகச் சேர்ந்த ஜோடி வெகு சீக்கிரமே வாழ்க்கையிலும் சேர்ந்தது. கிட்டப்பா ஏற்கெனவே கல்யாணம் ஆனவர். ஆகையால், இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. ஆனால், இருவரும் ஒற்றைக் காலில் நின்று காரியம் சாதித்துக்கொண்டனர்.
சுந்தராம்பாள் எவ்வளவு கறுப்போ, கிட்டப்பா அவ்வளவு சிவப்பு! நாடகத்தில் கிட்டப்பா பெண் வேஷம் கட்டினால், பெண்களுக்கே மோகம் வரும்.
அதேபோல் சுந்தராம்பாள் ஆண் வேஷம் கட்டினால், ஆண்களுக்கே தாகம் வரும்!
பெண்கள் ஆண் வேஷத்தில் நடிக்க வழி அமைத்தவர் கே.பி.சுந்தராம்பாள் என்பதுதான் இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.
பின் இருவரும் சேர்ந்து புது நாடக கம்பெனி ஒன்றைத் தொடங்கினார்கள். லட்ச லட்சமாகச் சம்பாதித்த அந்த கம்பெனியின் பெயர் ‘ஸ்ரீநாடக சபா’!
மேடைகளில் தெலுங்கு கொடி கட்டிப் பறந்த காலம் அது. போனால் போகிறது என்று கடைசியாகத் தமிழில் துக்கடா மட்டும் பாடுவார்கள்.
இந்தச் சூழலை உடைத்து, மேடைகளில் தமிழை வெற்றிகரமாக நிறுவியதில் கிட்டப்பா – சுந்தராம்பாள் ஜோடிக்குப் பெரும் பங்கு உண்டு. அதேபோல, கோயில் மேடைகளில் அந்தந்தக் கடவுளர்களின் பாடல் பாடும் மரபு உருவாகக் காரணம் சுந்தராம்பாள்!
அந்த நாட்களில் அதிக சம்பளம் வாங்கிய ஜோடி கிட்டப்பா – சுந்தராம்பாள் ஜோடிதான்.
ரங்கூனில் நாடகம் நடத்தப் போனபோது, சுந்தராம்பாளுக்குப் பேசப்பட்ட சம்பளம் 40,000. ரங்கூனில் நாடகத்துக்கு ஏற்பாடு செய்த சுல்தான், சுந்தராம்பாளை முன் பின் பார்த்தது இல்லை.
நேரில் பார்த்தபோது தலையில் அடித்துக்கொண்டு அழுதார், ”இந்தக் கறுப்பிக்கா 40,000… எவன் பார்ப்பான், எப்படி வசூல் ஆகும்?” என்று.
ரங்கூனில் இருந்து கலை நிகழ்ச்சி முடித்து சுந்தராம்பாள் திரும்பும்போது செலவுகள் கழிந்தது போக, சுல்தானுக்கு 3 லட்சம் சம்பாதித்துத் தந்திருந்தார் சுந்தராம்பாள்!
சுந்தராம்பாளின் கலை வாழ்வில் மறக்க முடியாத படம் ‘ஒளவையார்’.
வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால், சிவாஜியின் நினைவு வருவதுபோல, ஒளவையார் என்றால் சுந்தராம்பாளின் முகம் நினைவுக்கு வரக் காரணமான படம். ஜெமினி ஸ்டுடியோவின் தயாரிப்பில் ஒரு மைல்கல் ‘ஒளவையார்’.
மொத்தம் 13 படங்கள் நடித்தார் சுந்தராம்பாள். 1964-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். தனது பிறந்த ஊரான கொடுமுடியில் 1964-ல் ஒரு திரை அரங்கம் கட்டினார், பெயர்: கே.பி.எஸ்!
இந்தியாவிலேயே முதன்முதலாக திரைத் துறையைச் சேர்ந்த ஒருவர் மேலவை உறுப்பினராகப் பதவியேற்ற வரலாறும் சுந்தராம்பாளுடையது தான்.
தனது பதவிக் காலத்தில் கிடைத்த ஊதியம் அவ்வளவையும் பொதுச் சேவைக்கே செலவிட்டார்!
நகமும் சதையுமாக என்பார்களே அதற்கு சரியான உதாரணம் கிட்டப்பா – சுந்தராம்பாள் தான். அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தார்கள் இருவரும்

வள்ளியம்மை வள்ளி