சினிமா

என்.டி.ராமாராவ் பிறந்த நாள்

!🔥

என்.டி.ராமாராவ் பிறந்த நாள்💐

👤 என்.டி.ஆர். என்று அழைக்கப்படும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் 1923ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி ஆந்திர மாநிலம் நிம்மகுரு என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் நன்டமுரி தாரக ராமாராவ்.

👤இவர் 1947-ல் மன தேசம் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அதன் பிறகு தயாரிப்பாளர் பி.ஏ.சுப்பாராவின் ‘பல்லேடுரி பில்ல” படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

👤 1951-ல் வெளிவந்த ‘பாதாள பைரவி” திரைப்படம் இவருக்கு அபார வெற்றியை பெற்றுத் தந்தது. 1968-ல் தேசிய விருதையும், பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார்.

👤 1980-களில் திரையுலகிலிருந்து ஓய்வு பெற்று தீவிர அரசியலில் ஈடுபட்ட இவர் 1983-1994 ஆண்டுகளுக்கு இடையே 3 முறை ஆந்திர மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

👤 மக்களின் இதயத்தில் இன்றும் வாழ்ந்து வரும் என்.டி.ராமாராவ் தனது 72வது வயதில் (1996) மறைந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button